பூண்டு பால் (கர்ப்பிணி பெண்களுக்கு)

தேதி: December 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பால் - அரை லிட்டர்
பெரிய மலை பூண்டு - முழு பூண்டு ஒன்று
சர்க்கரை - இனிப்புக்கு தகுந்த மாதிரி


 

பூண்டை தோலுரித்து கழுவி பொடியாக நறுக்கி பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
பூண்டு பாலில் நன்கு வேகனும்.
அரை லிட்டரை ஒரு டம்ளராக வற்றியதும் அதில் சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.
பூண்டு வாயில் தடுக்குது என்றால் மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள்.


இது கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பது மாத கடைசியில் வலி வர தொடங்கும் போது கொடுத்தால் மேலும் மேலும் வலி வந்து சுகப்பிரசவம் ஆகும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம், தங்களின் வாழ்த்துக்கள் மற்றும் தங்களின் கர்ப்பிணி பெண்களுக்கான உணவு செய்முறைக்கு (முட்டை சோறு மற்றும் பூண்டு பால்) மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள குறிப்புகள் கொடுத்தமைக்கு மீண்டும் மிக்க நன்றி.

அன்புடன்
ஜோவிட்டா.

டியர் ஜோவிட்டா
சுக்கு பால் கொடுத்துள்ளேன் அது கண்டிப்பாக செய்து குடிங்கள்.
நல்ல படியாக குழந்தை பெற்றெடுக்க என் வழ்த்துக்கல்.
ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா, இந்த செய்முறையில் முழு பூண்டையும் போட வேண்டுமா அல்லது ஒரு பல் போதுமா? வலி வராத முன்னரே இதை சாப்பிடலாமா? எந்த மாதத்தில் இருந்து சாப்பிடலாம்? நான் தற்போது 8மாதம்.

All it takes, is....just a moment...!

http://iniyaislam.wordpress.com

வா அலைக்கும் அஸ்ஸலாம் உம்ம் ஒமர்
இது இப்ப குடிக்க கூடாது ஒன்பதாவது மாதம் டெலிவரி டேட்டுக்கு முன் லேசாக வலி எடுக்க ஆரம்பிக்கும் போது காய்ச்சி குடிக்கனும்.
முதல் பையன் ஆப்பரேஷன்.
இரண்டாவது பையனுக்கு சுக்கு பால் குடித்து முடித்ததும் வலி எடுக்க ஆரம்பித்த போது இதை தான் காய்ச்சி குடித்தேன், நார்மல் டெலிவரி ஆனது.

மற்றபடி செல்விமேடம் நிறையா டிப்ஸ் கொடுத்துள்ளார்கள்.அதை பின் பற்றவும்.

ஜலீலா

Jaleelakamal

உம்ம் ஒமர் பூண்டு பால் பற்றி கேட்டு இருந்தீர்கள்.
பிறகு இதை பார்த்தீர்களா?

கர்பிணி பெண்கள் தான் இல்லை சாதரண ஆட்களும் கேஸ் பிராப்ளத்துக்கு இதை செய்து சாப்பிடலாம்.

ஒரு கப்புக்கு பெரிய ஒரு நான்கைந்து பூண்டு போட்டு பதினைந்து நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம்
ஜலீலா

Jaleelakamal

அன்பு ஜலீலா,

இந்த பூண்டு பால் குறிப்பு பார்த்து, மருமகளுக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்ததுன்னு சொன்னார்.

நன்றி, ஜலீலா

அன்புடன்

சீதாலஷ்மி