சுக்கு காபி

தேதி: December 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

சுக்கு - 50 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
கருப்பட்டி (பனைவெல்லம்) - 50கிராம்


 

சுக்கு, மிளகு, தனியா ஆகியவற்றை பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கருப்பட்டியை தட்டி போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்து கருப்பட்டி கரைந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு மீண்டும் 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
10 நிமிடம் கழித்து வடிகட்டி சூடாக குடிக்கலாம்.


சுக்கு, மிளகு, தனியாவை சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்தலாம். மிளகாய் பஜ்ஜியுடன் சூப்பர் காம்பினேஷன். குளிர் காலத்திற்கு ஏற்ற சூடான சுவையான காப்பி. இருமல் உள்ளவர்கள் குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கவிசிவா
உங்களுடைய குறிப்பிலிருந்து பால் கஞ்சி வெங்காயம் மிளகாய் பச்சடி சுக்கு காபி செய்தேன் ரோம்பனல்லை இருந்தது.குறிப்புக்கு நன்றி.என்னக்கு அறிசுவை மக்கர் பண்ணுது அதுதான் ஒரேதா இதிலேயே பின்னுட்டம் கொடுத்திட்டேன் தப்பநினக்கதயுங்கோ.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் சுகா பால் கஞ்சி வெங்காயம் மிளகாய் பச்சடி சுக்கு காபி செய்திங்களா? ரொம்ப சந்தோஷம் சுகா. தனி தனியா இல்லாமல் ஒரே இடத்தில் பின்னூட்டம் எழுதினால் என்ன? எல்லாமே மகிழ்ச்சிதான். ரொம்ப நன்றி சுகா
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!