மட்டன் சால்னா

தேதி: December 3, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டு இறைச்சி (மட்டன்) - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 4(பொடியாக நறுக்கியது),
தக்காளி - 4(பொடியாக நறுக்கியது),
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
அரைக்க:
=================
காய்ந்த மிளகாய் - 6,
மிளகு - 1 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
கசகசா - 1 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
================
எண்ணெய் - 4 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

ஆட்டு இறைச்சியை கழுவி வைக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, ஆட்டு இறைச்சி
சேர்த்து வதக்கவும்.
நன்கு தண்ணீர் சுண்டி வதங்கிய பின், அரைத்த மசாலா,உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் 2 டம்ளர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்