மொளகூட்டல்

தேதி: December 3, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - 1,
துவரம் பருப்பு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 3,
உளுத்தம் பருப்பு - 2 + 1/2 தேக்கரண்டி,
தேங்காய் - 1/2 மூடி + 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.


 

துவரம்பருப்பை குக்கரில் 5 விசில் விட்டு குழைய வேக வைக்கவும்.
முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 2 மிளகாய், 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சிவக்க வறுத்து, 1/2 மூடி தேங்காய், சீரகம் சேர்த்து அரைக்கவும்.
வெந்த பருப்பு, முருங்கைக்காய், அரைத்த விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
வாணலியில் மீதி எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, 1 மிளகாய், 1/2 தேக்கரண்டி தேங்காய், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.


சாதத்தில கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றாக இருந்தது. நன்றி.

பாராட்டுக்கு நன்றி விஜி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.