கத்தரிக்காய் துவையல் -2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 4
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 8
மல்லிவிதை - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு


 

கத்தரிக்காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், மல்லிவிதை, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
சிறிது ஆறியதும் மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கி, எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வதக்கிய துண்டுகளை அரைத்து வைத்துள்ள பொடியுடன் கலந்து கொள்ளவும்.
இதனுடன் புளிக்கரைசல், உப்பு, வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கடுகு தாளித்துக் கொட்டி பயன்படுத்தவும்.


மேலும் சில குறிப்புகள்