உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

புரோக்லி - காலிஃபிளவர் ஸலட்

 


தேவையான பொருட்கள்

  • புரோக்லி - 1 சிறியது
  • காலிஃபிளவர் - 1 சிறியது
  • பிரெட் தூள் - 1 கப்
  • பார்மஜான் சீஸ் - 1/2 கப்
  • பார்ஸ்லி இலை- 3 மேசைக்கரண்டி
  • ஒலிவ் எண்ணெய்
  • உப்பு

செய்முறை

  • பிரெட் தூள், அரைவாசி சீஸ், பார்ஸ்லி இலைகளை 2 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய் சேர்த்து குழைத்து வைக்கவும்.
  • புரோக்லி, காலிஃபிளவரை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • ஒரு பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய் விட்டு காலிஃபிளவரை போட்டு உப்பு தூவி 2 மேசைக்கரண்டி தணீர் விட்டு மூடி 4 - 5 நிமிடங்களுக்குஅவிக்கவும்.
  • பின்னர் புரோக்லியை சேர்த்து சிறிது உப்பு தூவி மேலும் 3 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து மூடி 4 நிமிடங்களுக்கு அவிக்கவும்.
  • மரக்கறி அவிந்ததும் இறக்கி ஆறவிடவும்.
  • பின்னர் இதனுள் சீஸ் கலவையை சேர்த்து கலக்கவும்.
  • இதனை ஒரு பேக்கிங் பானில் போட்டு பரப்பி அதன் மேல் மீதி சீஸை தூவி 350 Fஇல் 5 - 10 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கவும்.
  • சுவையான ஸலட் தயார். விரும்பிய உணவுடன் பக்க உணவாக சாப்பிடலாம்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3- 4 நபர்களுக்கு 15 நிமிடங்கள் 25 நிமிடங்கள்
  random food image


comments