தேவையான பொருட்கள்
- Unbleached மைதா - 2 கப்
- ஈஸ்ட் - 1பாக்கெட் (2 1/2 தேக்கரண்டி or 0.25oz)
- உப்பு
- சீனி - 1/4 தேக்கரண்டி
- ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
|
செய்முறை
- மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் சீனியை போட்டு 5 - 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- மாவினுள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- இதனுள் ஈஸ்ட் கரைசலை சேர்த்து சப்பாத்தி மாவு பததிற்கு நன்கு அழுத்தி குழைக்கவும்.
- பின்னர் ஒரு எண்ணெய் பூசிய கிண்ணத்தில் போட்டு மூடி 1 - 11/2 மணித்தியாலங்கள் மிதமான சூடான இடத்தில் வைக்கவும்.
- இப்பொழுது மா இருமடங்கு ஊதியிருக்கும். இதனை எடுத்து மென்மையாக பிசையவும்.
- ஒரு தட்டையான பெரிய பேக்கிங் பானில் ஒலிவ் எண்ணெய் தடவவும்.
- இதனுள் குழைத்த மாவை வைத்து அழுத்தி 3/4 - 1 அங்குல உயரத்திற்கு பரவி ஒரு ஈரத்துணியால் மூடி மிதமான சூடுள்ள இடத்தில் 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- அவனை 400 Fஇல் முற்சூடு பண்ணவும்.
- மறுபடியும் மா பொங்கி இருக்கும். இதன் மேல் ஒரு விரலால் சிறிய பள்ளங்களாக வரிசையாக மென்மையாக அழுத்தி விடவும்.
- இதன் மேல் மீதி ஒலிவ் எண்ணெயை ஒரு பிரஷால் தடவி உப்பு தூவவும்.
- பின்னர் முற்சூடு படுத்திய அவனில் 20 - 25 நிமிடங்கள் அல்லது மேற்பக்கம் சிறிது பிரவுண் நிறமாகும்வரை வைத்து எடுக்கவும்.
- சுவையான பிரெட் தயார். இதனை துண்டுகளாக வெட்டி தனியேயும் சாப்பிடலாம். அல்லது பக்க உணவுகளுடனும் சாப்பிடலாம்.
|
குறிப்பு:
இதற்கு மைதாவும் பாவிக்கலாம்.
வழங்கியவர்
Mrs. B. Narmatha
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
3 / 4 நபர்களுக்கு |
20 நிமிடங்கள் |
2 1/2 மணித்தியாலங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
39 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -