வெண்டைக்காய் தயிர் பச்சடி

தேதி: December 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 10
புளிக்காத தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து


 

வெண்டைக்காயை மெல்லியதாக வெட்டி எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
அதே எண்ணெயில் கறிவேப்பிலையை பொரிக்கவும். தயிரில் உப்பு சேர்த்து கலக்கி பரிமாறும் முன் பொரித்த வெண்டைக்காய், கறிவேப்பிலை கலந்து பரிமாறவும்.


பரிமாறும் முன் வெண்டைக்காயை தயிரில் கலந்தால் போதும். அதிக நேரம் தயிரில் ஊறினால் சுவையாக இருக்காது.

மேலும் சில குறிப்புகள்