அப்பிள் தோசை

தேதி: December 5, 2007

பரிமாறும் அளவு: 5 தோசைகள் வரும்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அப்பிள் - 3
பட்டர் - 4 மேசைக்கரண்டி
வெட்டிய ஸ்வீட் வெங்காயம் - 1/4 கப்
கறித்தூள் - 1 தேக்கரண்டி
எதாவது ஒரு சீஸ் - 1/4 கப்
சோளமா - 2 தேக்கரண்டி
மைதா/கோதுமை மா - 1 கப்
உப்பு


 

மாவை தண்ணீர், உப்பு விட்டு தோசை மா பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
அப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டரைப் போட்டு சூடாக்கவும். பட்டர் உருகியதும் அதனுள் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதனுள் அப்பிள் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
பின்னர் அதனுள் கறித்தூள், சோளமாக்கரைசல் சேர்த்து கிளறவும்.
கலவை தடித்ததும் இறக்கவும்.
கரைத்த மாவை தோசைக்கல்லில் அல்லது பானில் ஊற்றி மெல்லிய சிறிது பெரிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.
பின்னர் ஒவ்வொரு தோசையின் நடுவிலும் நீளவாக்கில் அப்பிள் கலவையை வைத்து இரு கரைகளையும் அதன் மேல் மூடி விடவும்.
சுவையான அப்பிள் தோசை தயார். சூடாக தனியே அல்லது அப்பிள் ஸோஸுடன் பரிமாறவும். (பரிமாறும் போது தோசையை நடிவில் சரிவாக வெட்டி இரு துண்டுகளாக்கி விடவும்.)


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் கறித்தூள் சேர்க்காமல் சர்க்கரை சேர்த்து செய்தேன்பா,ரொம்ப நல்லாயிருந்தது.நன்றி உங்களுக்கு!!

நர்மதா அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த அப்பிள்தோசை,மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹலோ நர்மதா, சீஸ் எந்த இடத்தில் சேர்க்க வேண்டும்?