kuruma

hi friends,
i want to do kuruma with vegetables...i want that kuruma to be white in color..anyone reply me how to prepare vegetable kuruma in white color..

குருமா வெள்ளையாக வருவதற்கு
முதலில் கசகசா 1 1/2 ஸ்பூன் போட்டு அதனுடன் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து மைபோல அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள்{மிக்சியில் அரைத்தால் சரியாக அரைபடாது}
அடுத்து பச்சை மிளகாய்- 2, தக்காளி - 1, தேங்காய் - 2 சில்லு, அதனுடன் அரைத்த கசகசா விழுது, முந்திரி இவைகளை சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்
பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி அதில் கல் பாசி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது {பட்டை- 1, இலவங்கம் - 2 சேர்த்து அரைத்தது} - 1 ஸ்பூன் பொட்டு வதக்கி அதில் வெங்காயம் பொட்டு வதக்கி காய்கறிகளையும் போட்டு வதக்கி அதில் அரைத்த மசாலாவையும் கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு, மஞசள் பொடி - 1/4 ஸ்பூன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வர விட்டு இறக்கவும். விருப்பபட்டால் தனியாபொடி 1 ஸ்பூன் சேர்க்கலாம். இந்த குருமா நீங்கள் கேட்டபடி வெள்ளையாக இருக்கும்

Jaleela Kamal

குருமா வெள்ளையாக வேண்டும் என்றால் தக்காளி போடக்கூடாது.
அதற்கு பதிலாக தயிர் முந்திரி, கசகசா, தேங்காய். போடனும், மிளகாய் தூளுக்கு பதிலாகாக பச்சமிளகாய் காரத்திற்கு தகுந்தாற்போல் எட்டு,பத்து அந்த மாதிரி அரைத்து ஊற்றனும்.
ஜலீலா

Jaleelakamal

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
குருமா வெள்ளையாவதற்கு கசகசாவுடன், முந்திரி, ப.மிளகாய், சோம்புஆகியவற்றை அரைத்துசேர்த்து தேங்காய் ஒன்றை பால் எடுத்து ஊற்றவும். மீதி காரத்திற்கு ப.மிளகாயை கீறி தாளித்த பிறகு வெங்காயத்துடன் தக்காளி, போட்டு வதக்கவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

http://www.arusuvai.com/tamil/node/5726
இந்த லின்கில் இருக்கும் குருமாவை செய்யுங்க..விருந்தினர்கள் அசந்து போவாங்க பாருங்க.

thanks for the reply friends

மேலும் சில பதிவுகள்