தேங்காய் துவையல் -1

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - ஒரு மூடி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் - 6
புளி - ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயம் - பட்டாணி அளவு
உப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
உலர்ந்த மிளகாய்க்குப் பதில் பச்சை மிளகாயையும் பயன்படுத்தலாம்.
வறுத்த பருப்புடன் சிறு எலுமிச்சை அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
முக்கால் பதத்திற்கு அரைபட்டவுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும்.
மிகவும் நைசாக அரைத்து விடாமல், தேங்காயும் பருப்பும் சேரும் அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்