கருவாடு அவியல்

தேதி: December 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெத்திலி கருவாடு அல்லது ஏதேனும் கருவாடு - 200 கிராம்
பரங்கிக்காய் - 1 சிறு துண்டு
முருங்கைக்காய் - 1
வாழைக்காய் - 1 (சிறியது)
மாங்காய் - 1 (சிறியது)
பச்சை மிளகாய் - 3
புளி - 1 நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய் துருவல் - 1 கப்
சின்ன வெங்காயம் - 8
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி(காரத்துக்கு ஏற்ப)
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து


 

கருவாடை சுத்தம் செய்யவும். அரைக்க வேண்டியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும். காய்கறிகளை நீளவாக்கில் வெட்டவும்.
புளிக்கரைசல், உப்பு, அரைத்த மசாலா எல்லாவற்றையும் 2 கப் தண்ணீரில் கலந்து சட்டியில் ஊற்றவும்.
இதில் காய்கறிகள், கருவாட்டை சேர்த்து அடுப்பில் ஏற்றவும். சட்டியை மூட வேண்டாம்.
காய்கள், கருவாடு வெந்து தண்ணீர் வற்றி வரும்போது ஒரு கொத்து கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும். மண் சட்டியில் செய்தால் சுவையே தனி.


மாங்காயின் புளிப்பை பொறுத்து புளிக்கரைசல் சேர்க்கவும். கருவாட்டில் அதிகம் உப்பிருந்தால் உப்பை குறைவாக சேர்க்கவும். ஒன்றிரண்டு காய்கள் இல்லாவிட்டாலும் இதே போல் செய்யலாம். காய் போடாமல் கூட செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்