தேவையானப் பொருட்கள்
- மைதா மாவு - 1/4 கிலோ
- சீனி - 150 கிராம்
- முட்டை - 1
- தேங்காய் - பாதி மூடி
- கருப்பு எள் - 1 மேசைக்கரண்டி
- எண்ணெய் - பொரிக்க
|
செய்முறை
- முதலில் தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
- மைதாமாவில் தேங்காய் பால்,சீனி, முட்டை இவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
- முறுக்கு சுடும் பதத்திற்க்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். எள் சேர்த்து நன்கு மாவை கலக்கி அச்சு முறுக்கு சுடும் அச்சை மாவில் முழுவதுமாக முக்காமல் பாதி அச்சுவரைக்கும் முக்கி எண்ணெய்யை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.
|
குறிப்பு:
எண்ணெய்யை பொரிக்க சூடாக்கும் போது அதில் அச்சையும் போட்டு வைக்கவும் அந்த அச்சு சூடான பின்புதான் அச்சை மாவில் முக்கவும் அப்பொழுதுதான் மாவு அச்சில் ஒட்டும்
வழங்கியவர்
செய்யது கதீஜா ஜப்பான்
சமீபத்தியக் கருத்துக்கள்
16 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
23 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
ஒரு மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -