ஊறுகாய் கறி

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம் - 150 கிராம்
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை- சிறிது
எழுமிச்சை ஊறுகாய் 1(அடை ஊறுகாய்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிப்புக்கு
தேங்காய் அரைத்தது - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது


 

முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

பின் நறுக்கிய வெங்காயத்தில் தேங்காய் விழுது,உப்பு, மசாலாதூள் இவற்றை சேர்த்து வைக்கவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து, இந்த கலவையை போட்டு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.

பின் வெங்காயம் வெந்து ஆறியதும் அடை ஊறுகாயை விதைகளை நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு மசித்து வெங்காயத்துடன் சேர்க்கவும்.

இது நெய் சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

விதைகளை நீக்காமல் சேர்த்தால் வெங்காயக்கறி கசந்து விடும்.


விதைகளை நீக்காமல் சேர்த்தால் வெங்காயக்கறி கசந்து விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா அடை ஊறுகாய் என்றால் இலையில் இருக்குமே அதுவா?

அடை ஊறுகாய்ன்னா எழுமிச்சையை மேலே மட்டும் நாளு பாகமாக கீறி உள்ளே உப்பு சேர்த்து ஒரு பாட்டலில் வைத்து வெயிலில் வைக்கனும். மூடி போட கூடாது. இரவு எடுத்து வீட்டுக்குள் வைக்கும் போது ஒரு துணியை மட்டும் கட்டி வைக்கனும்.எத்தனை நாள்னு சொல்ல முடியாது எப்ப எழுமிச்சையில் இருந்து திக்கான திரவம் வருதோ அப்ப நல்ல பதம் என்று அர்த்தம்.அது நல்ல ப்ரவுன் கலருக்கு மாறும்.பின்னே நாம் அதை எடுத்து உபயோகிக்கலாம். கீ ரைஸுக்கு இந்த ஊறுகாயும்,மாசி சம்பலுமே போதும். அவ்வள்வு மணமும், ருசியாகவும் இருக்கும்.

அன்புடன் கதீஜா.