கொண்டைக்கடலை சுண்டல்

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொண்டைக் கடலை -- 1 கப் (இரவே ஊற வைக்கவும்)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கவும்)
சிவப்பு மிளகாய் -- 3 என்னம்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -- 3 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப


 

முதலில் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
பின் எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
அதனுடன் வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி வத்தலை போடவும் .
பின் வேகவைத்த கொண்டைக்கடலையை போட்டு மீண்டும் நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கி பறிமாறலாம்.
சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்