பால் குழம்பு

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
கசகசா - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6 (அ) 7
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெல்லம் - பாக்களவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தேங்காய் - ஒன்று
கத்தரிக்காய் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
இலவங்கம் - ஒன்று


 

ஒரு கடாயில் பருப்புகள், மிளகாய், தனியா, வெந்தயம், கசகசா ஆகியவற்றை தனித்தனியே வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காயை முதல்பால், இரண்டாம்பால், மூன்றாம்பால் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேக விடவும்.
புளியைக் கரைத்து ஊற்றி அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து 3-ம் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
5 நிமிடம் கழித்து 2- ம் பாலை ஊற்ற வேண்டும். கடைசியாக முதல் பாலை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்