தேங்காய் பர்பி

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் துருவல் -- 1 கப்
சர்க்கரை -- 1/2 கப்
நெய் -- 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி -- 1/2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -- 20 என்னம்


 

முதலில் வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து வறுக்கவும்.(1/2 நிமிடம் போதும்)
தேங்காய் துருவலை தனியே எடுத்து வைத்து விட்டு அதே வாணலியில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.
அதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்க்கவேண்டும்.
பாகு கம்பி பதம் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதற்கு முன்பாகவே வறுத்த தேங்காயை பாகில் போட்டு கிளற வேண்டும்.
நன்கு சேர்ந்து உருண்டு வரும் சமயத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி வைக்கவும்.
சிறிது நேரம் சூடுடனே வில்லைகள் போட்டு ஒவ்வொன்றின் மீதும் முந்திரி பருப்பை வைத்து அழுத்தி சூடு ஆறியதும் சாப்பிடலாம்.
சுவையான தேங்காய் ஃபர்பி ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

i was searched avery long time for this recepi. thaks a lot i will try it first.

Try and try again until you reach the target.

Anitha

Try and try again until you reach the target.

Anitha