ஈசி கேசரி

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை -- 1 கப் (வறுத்தது)
சர்க்கரை -- 1 கப்
கேசரி பவுடர் -- 1/2 சிட்டிகை
முந்திரி பருப்பு -- 10 என்னம்
உலர்ந்த திராட்சை / கிஸ்மிஸ் -- 10 என்னம்
ஏலக்காய் -- 4 என்னம்
நெய் -- 2 ஸ்பூன்


 

முதலில் இரண்டு கப் தண்ணீர் ( ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர்) விட்டு அதில் கேசரி பவுடர், ஏலக்காயை கிள்ளி போடவும்.
கொதித்ததும் ரவையை போட்டு கிளறவும்.ரவை நன்கு வெந்து வரும்
பின் அடுப்பில் இருந்து இறக்கி சர்க்கரை போட்டு கிளறவும். சர்க்கரை இளகி கட்டி யில்லாமல் ரவை கிளறவரும்.
அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி சிறிது நேரம் அப்படியே சிம்மில் வைக்கவும்.
அப்பொழுது தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து அப்படியே கேசரியில் கொட்டவும்.
பின் மேலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ்ஸை பொரித்து கேசரியில் கொட்டவும்.
நன்கு கிளறி இறக்கி பரிமாறவும்.
கட்டியில்லாமல் செய்யக்கூடிய ஈசியான கேசரி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

It's very easy and Useful Recipe to us
we enjoyed it,
thank you very mush subha......

its very easy and taste nice. thank u for ur receipe..

Love is Best, so PLS dont test

புஷ்பலதா , ஷர்மி ஆனந்த் உங்களுக்கு மிகுந்த நன்றி தோழிகளே!!

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் வருகிறேன்..
உங்களின் பின்னூட்டன் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

ஹேய் சுபா என்ன இது எங்க போயிட்டீங்க?வந்தாச்சா நேகமா உங்களுக்கு அடுத்த வாரம் கொண்டாட்டம் தான் கூட்டாஞ்சோறுக்கு..பயல் நலமா

ஹாய் ரூபி

எப்டி இருக்கீங்க?

அபுதாபி எப்டி இருக்கு?
நான் இந்தியாவில் குடியேறி இன்டெர்னெட் கனெக்ஷனுக்கு இவ்ளோ நாளாச்சிப்பா??
அறுசுவையா? அப்டின்னா என்ன அந்தளவுக்கு ஆகிவிட்டேன்... இனி தொடரட்டும் போர்க்களம்....

சுபா ஜெயப்ரகாஷ் அவர்களே,

அறுசுவையில் நீங்க ரொம்ப சீனியர் என்று சொன்னார்கள், நான் சமீபத்தில் உறுப்பினர் ஆன ஜூனியர். இனி உங்கள் பதிவுகளை அடிக்கடி பார்க்கலாம் அல்லவா, வருக, வருக!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி சீதா லஷ்மி,
இனி தினமும் அறுசுவை தான்!!

நலமா. நான் அறுசுவைக்கு வந்த புதிதில் வெக்கேஷனுக்காக இந்தியா போனீங்க. இப்போ பெர்மனெட்டாகவே போயிடீங்க. திவாகர் நலமா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனிஷா,
ரொம்ப நியாபக சக்தி உங்களுக்கு..
திவாகர் ப்ளே ஸ்கூல் போறான்..\அவனுக்கு இன்னைக்கு லீவு தூங்கறான்..

ஓ.. ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டீர்களா. பெங்களூரில்தானே இருக்கிறீர்கள். இனிமே தவறாம அறுசுவைக்கு வாங்க. எப்பவும் போல குதுகலிப்போம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வாங்க சுபா வாங்க
என்ன வீடு எல்லாம் செட்டாகி விட்ட்தா?
திவாகர் நலமா?
ஜலீலா

Jaleelakamal