பருப்பு துவையல் - 1

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கடலைப்பருப்பு - கால் கப்
உலர்ந்தமிளகாய் - 8
புளி நெல்லிக்காய் அளவு
பூண்டு - 6 பற்கள்
கடுகு - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - தாளிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு


 

புளியை சிறிது தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய், கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
ஆறியதும் அதனுடன் உப்பு, பூண்டு, ஊறவைத்த புளி ஆகியவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதில் கடுகு தாளித்துக் கொட்டி பயன்படுத்தவும்.


மேலும் சில குறிப்புகள்