சிக்கன் ஸ்டஃப்

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 100 கிராம்
முட்டை - 1
எழும்பு நீக்கிய கொத்திய கோழி கறி - 100 கிராம்
சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
மசாலாதூள் - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது


 

முதலில் கோதுமை மாவில் முட்டையை சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.

பின்பு கோழிகறியில் சிறிது,உப்பு,மஞ்சள் தூள்,மசாலாதூள், சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.

வெந்ததும் தண்ணீர் ஒரு துளி கூட இல்லாமல் இறக்கிவிடவும். நன்கு வரட்டியது போல இருக்க வேண்டும்.

பின் கறியில் அஜினோமோட்டோ,சோயா சாஸ், உப்பு,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கலந்துவைக்கவும்.

சப்பாத்தியை வளர்த்து சதுரமாக வெட்டி வைத்துக்கொள்ளவும். கொஞ்சம் தடிமனாக இருக்க வேண்டும்.

பின் அதில் கறி கலவையை வைத்து முக்கோணமாக மடிக்கவும் நன்கு சேர்த்து பிரியாமல் ஒட்டிவைக்கவும்.

இதே போல் எல்லா சப்பாத்தியையும் செய்து முடிக்கவும்.

பின் எண்ணெய்யை நன்கு சூடாக்கி அதில் செய்து வைத்தவைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்