சௌ சௌ பச்சடி

தேதி: December 7, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சௌ சௌ - 1
தேங்காய்த் துருவல் - அரை மூடி
பச்சை மிளகாய் - 4
புளி - எலுமிச்சங்காய் அளவு
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு


 

சௌ சௌவை தோலுடன் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுக்கவும்.
வறுபட்டதும் கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆறியதும் சற்று கர கரப்பாக அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள ஜெயந்தி!
உங்களின் செள செள பச்சடி, ஆனியன் ரைஸ் இரண்டும் செய்து பார்த்தேன். இரண்டுமே மிகவும் நன்றாக வந்தது. பொதுவாக பச்சடி என்றால் தயிர் சேர்த்ததைத்தான் சொல்வார்கள். இதில் தயிர் சேர்ப்பதில்லையா? நான் தயிர் சேர்த்தும், பிறகு தயிர் சேர்க்காமலும் செய்தேன். இரண்டுமே சுவையாக இருந்தன. சுவையான குறிப்புகளுக்கு நன்றி!!

திருமதி மனோ அவர்களே பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களைப் போன்ற அனுபவசாலிகள் பாராட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இது துகையல்தான். ஆனால் ஏனோ பச்சடி என்று சொல்வர்.

சௌ சௌவை தோல் நீக்கி துண்டுகளாக்கி வேக வைத்து தயிர் சேர்த்து பச்சடி செய்வேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி