பப்ஸ் பூரணம் (சிக்கன்)

தேதி: December 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 1/4கிலோ
வெங்காயம் - 200 கிராம்
மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
தக்காளி பழம் - 2
தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிது
கலர் பொடி - சிறிது


 

முதலில் சிக்கனை கழுவி சிறிய துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

பின் வெங்காயம்,தக்காளி ,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும் நன்கு வெங்காயம் வதங்கியதும்,தக்காளியை போட்டு வதக்கவும்,பின் மசாலாதூள்,கலர் பொடி,உப்பு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.

எல்லாம் நன்கு வதங்கியதும் சிக்கனை சேர்த்து தீயை மிதமானதாக வைத்து வேகவிடவும் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

கறி நன்கு வெந்ததும் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்