இட்லி பொடி (குழந்தைகளுக்கு)

தேதி: December 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம் பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு மேசைக்கரண்டி (வறுத்தது)
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி (வறுத்தது)
கறிவேப்பிலை - கால் கப்
உப்பு - அரை தேக்கரண்டி (அ) தேவையான அளவு
பூண்டு - ஒன்று


 

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியாக வறுக்கவும்.
வறுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும்.
இட்லியை பொடியாக நறுக்கி இந்த பொடியை தூவி நெய்யை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும்.
உப்பையும் வறுக்கனும். இல்லை எல்லா பொருளையும் வறுத்து விட்டு அந்த சூட்டில் வாணலியில் கடைசியாக போட்டாலும் சரி.


ஒரே ஒரு இட்லி சாப்பிட்டாலும் இதில் எல்லா சத்தும் அடங்கியுள்ளது. பருப்பு வகைகள், பூண்டு கேஸுக்கு, நெய் ஆகா கமகமக்கும், கறிவேப்பிலை தலை முடி சொட்டையாகமல் இருக்கும் சிறுவயதிலிருந்தே சேர்த்து விடுங்கள். கரகரப்பாக திரியுங்கள் அப்ப தான் சாப்பிடும் போது கடுக்கு மொடுக்கு என்று இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர்... எங்க அம்மா கொடுத்த பொடி தீர்ந்ததினால் உங்க முறைபடி செய்தேன்.. பூண்டு போடுவது முதல் முறை.. ரொம்ப அருமையா வந்து இருக்கு... இதில மிளகாய் போட்டேன்.. மிளகு போடலை!!!

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டியர் இலா இட்லி பொடி பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
இதில் மிளகு குழந்தைகளுக்காக நமக்கு மிளகாயே போதும்.
ஜலீலா

Jaleelakamal