பார்ஸி கோழிக்கறி

தேதி: December 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிக்கறி - 1 கிலோ
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பல்
வத்தல் - 10
சீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி கெச்சப் - 3 மேசைக்கரண்டி
சீனி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் இஞ்சி,பூண்டை விழுதாக அரைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.

கோழிகறியை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அதில் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.

வத்தல்,சீரகத்தை ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்துக்கொள்லவும்.

முந்திரி பருப்பை தனியாக நைசாக அரைத்து வைக்கவும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் வத்தல் விழுதை சேர்த்து வதக்கி கோழிகறியை சேர்த்து கிளறி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.

தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

கறி வெந்ததும் முந்திரி விழுதை சேர்த்து கிளறி தக்காளி கெச்சப்,சீனி சேர்த்து கிளறவும்.

நன்கு கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா இதை நான் எப்போதோ செய்து பார்த்தேன். இப்பதான் பின்னூட்டம் குடுக்க முடிந்தது. சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது. சர்க்கரை சேர்க்காமல் செய்தேன். இருந்தும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

நலமா பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள். நீங்கள் எபோதோ செய்தாலும் மறக்காமல் பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி.சர்க்கரை சேர்த்து செய்தால் இதன் சுவை கொஞ்சம் டிப்ரெண்டாக இருக்கும்.

அன்புடன் கதீஜா.