தேங்காய் சாதம்

தேதி: December 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 400 கிராம்
தேங்காய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து வேகவைத்து சாதத்தை தயார் செய்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு பொரியவிட்டு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, தேங்காயையும் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் சாதத்தை போட்டு கிளறி இறக்கவேண்டும்.


மேலும் சில குறிப்புகள்