அரைநெல்லித் துவையல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரைநெல்லி - அரை கப்
பெருங்காயம் - ஒரு துண்டு
கடுகு - ஒரு தேக்கரண்டி
வற்றல் - 20
உளுந்தம்பருப்பு - அரை கப்
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைகேற்ப


 

நெல்லிக்காயை கழுவி விட்டு உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் உளுந்தம்பருப்பு, வற்றல் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
வேறொரு வாணலியில் நெல்லிக்காயை போட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் உப்பு, உளுந்தம் பருப்பு, வற்றல், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து அதில் இந்த விழுதையும் சேர்த்துப் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்