உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

புரோகோலி கூட்டு

 


தேவையானப் பொருட்கள்

  • புரோகோலி - 1/4 கிலோ
  • முழு பூண்டு - 1
  • வெங்காயம் - 1/4 (சிறிய துண்டு)
  • எண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்
  • உப்பு - 1/4 ஸ்பூன்
  • தண்ணீர் - 1/4 கப்
  • மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

செய்முறை

  • புரோகோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்)நறுக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.
  • பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்று தடிமனாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோகோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.
  • புரோகோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும்.
  • வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

குறிப்பு:

வேகவைப்பதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. புரோகோலியின் பச்சை நிறம் மாறாமல் வேகவைக்கவேண்டும்.அப்போதுதான் சுவையாகவும் சத்துக்கள் குறையாமலும் இருக்கும்.

வழங்கியவர்

அஸ்மா ஷர்ஃபுதீன்,ஃபிரான்ஸ்.

random food image


comments
பூண்டு
டிசம்பர் 9, 2007 - 9:25am - வழங்கியவர் Banu 123

ஹாய் அஸ்மா மேடம்,

பூண்டு பெரியது 1 என்று சொல்லி இருக்கிங்க, அது ஒரு பல்லா இல்லை ஒரு முழு பூண்டா

ஹலோ பானு!
டிசம்பர் 9, 2007 - 12:05pm - வழங்கியவர் Asma

பூண்டு என்று எழுதும்போதே நினைத்தேன், ஒரு பல்லா அல்லது முழு பூண்டான்னு சந்தேகம் வருமோன்னு. அதற்காகத்தான் செய்முறையில் 'பூண்டு பற்களை'ன்னு பன்மையில் போட்டேன். நீங்கள் கேட்டது பற்றி பரவாயில்லை. இப்போது 'முழு பூண்டு'ன்னு மாற்றிவிடுகிறேன். :) ஓ.கே.?

ஓகே
டிசம்பர் 9, 2007 - 3:06pm - வழங்கியவர் Banu 123

ஓகே இனி புரோக்கோலி கூட்டு செய்துட வேண்டியதுதான்:-)

புரோகோலி கூட்டு
டிசம்பர் 11, 2007 - 10:26am - வழங்கியவர் Banu 123

ஹாய் அஸ்மா மேடம்,

இன்று எங்கள் வீட்டில் உங்களது புரோகோலி கூட்டு தான் நல்லா சுவையாக இருந்தது.இந்த குறிப்பு எங்களுக்காக கொடுத்தற்க்கு மிக்க நன்றி.

நன்றி பானு!
டிசம்பர் 17, 2007 - 10:28am - வழங்கியவர் Asma

செய்துப் பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி!

புரோகோலி
ஏப்ரல் 1, 2008 - 3:46pm - வழங்கியவர் alarmelup

தங்கள் குறிப்பை செய்து பார்தேன். அருமை