தேவையானப் பொருட்கள்
- புரோகோலி - 1/4 கிலோ
- முழு பூண்டு - 1
- வெங்காயம் - 1/4 (சிறிய துண்டு)
- எண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்
- உப்பு - 1/4 ஸ்பூன்
- தண்ணீர் - 1/4 கப்
- மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை
- புரோகோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்)நறுக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.
- பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்று தடிமனாக நறுக்கிக்கொள்ளவும்.
- வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோகோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.
- புரோகோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும்.
- வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.
குறிப்பு
வேகவைப்பதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. புரோகோலியின் பச்சை நிறம் மாறாமல் வேகவைக்கவேண்டும்.அப்போதுதான் சுவையாகவும் சத்துக்கள் குறையாமலும் இருக்கும்.