முட்டை ரொட்டி ரோல்

தேதி: December 9, 2007

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - ஒன்று
சப்பாத்தி - 6
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - ஒன்று (அ) குருமிளகு பொடி
கறிவேப்பிலை - 10 இலை
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலாப் பொடி - கால் தேக்கரண்டி (தேவையில்லையென்றால் விட்டுவிடலாம்)
தேங்காய் எண்ணெய் (அ) சூரியகாந்தி எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

எண்ணெயை காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பொன்னிறமானதும் முட்டையை உடைத்து ஊற்றி சிக்கி விட்டு இறக்கி சப்பாத்தியில் 3 தேக்கரண்டி சிக்கிய முட்டை பொரியலை வைத்து சுருட்டவும்.


தேவையென்றால் கரம் மசாலாப் பொடி சேர்க்கவும். குழந்தைகளுக்கு அதன் சுவை பிடிக்காது. பள்ளிக்கு இப்படி ஏதாவது ரோல் போன்று ஈஸியாக சாப்பிடக்கூடியதை தான் குழந்தைகள் விரும்புவர்.

மேலும் சில குறிப்புகள்