வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல்

தேதி: December 9, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட், பீன்ஸ், பட்டாணிக்கடலை - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய்
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இறால் - 6 (அரைக்க வேண்டாம்)
உப்பு - 3/4 தேக்கரண்டி
ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் - சுமார் 15 - 20 ஷீட்
நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

கேரட், பீன்ஸ், பட்டாணிக்கடலை இவை மூன்றையும் பொடியாக நறுக்கி வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி காய்கறிகள், நறுக்கிய இறால் சேர்த்து கிளறி 10 நிமிடம் குறைந்த தீயில் உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி சூடாற விடவும்.
இதனை ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டுகளில் 2 தேக்கரண்டி வைத்து மடக்கி இருபுறமும் உள்ளிழுத்து சுருட்டி பொரிக்கவும்.


சைவம் சாப்பிடுபவர்கள் இறாலை தவிர்த்து விட்டு சுவைக்கு 1/2 வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து வெங்காயத்தை வதக்கவும். காய்கறிகள் வடித்த நீரை சூப் செய்யலாம். வேக வைத்தபின் தண்ணீர் இல்லாமல் வடிப்பதற்கு காரணம் அப்பொழுது தான் ஷீட்டில் வைத்து சுருட்ட எளிது. தண்ணீர் இருந்தால் பிரிந்து விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள தளிகா எப்படி இருக்கீங்க.ரீமா எப்படி இருக்கிறாள்.அலர்ஜி சரியாகிவிட்டதா. இன்று உங்கள் ஸ்ப்ரிங் ரோல் செய்தேன் சூப்பராக இருந்தது. நான் இரால் சேர்த்து செய்ததில்லை மட்டன்,சிக்கனில் செய்து இருக்கிறேன். இது டிப்ரெண்டாக இருந்தது.ஹஸ்ஸுக்கும் பிடித்து இருந்தது.செய்யவும் எளிதாக இருந்தது.காய்கறிகளை பொடியாக நறுக்கி இருப்பதால் சீக்கிரம் வேலை முடிந்துவிட்டது.மிகவும் சுவையான ரெசிபி தந்ததுக்கு ரெம்ப ரெம்ப நன்றி.

அன்புடன் கதீஜா.

ரொம்ப சந்தோஷம் கதீஜா
ஆம் அலர்ஜி சரியாகிட்டு என் நெய்பர் சிறிது நாள்கு நான்வெஜ் தவிர்க்க சொன்னார் அப்ப சரியாகிவிட்டது பாறேன்.