பக்கோடா

தேதி: December 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கடலை மாவு - அரை டம்ளர்
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - மூன்று ( பெரியது நீளமாக அரிந்தது)
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு தேக்கரண்டி (துருவியது)
பூண்டு - மூன்று பல் ( தோலுடன் தட்டியது)
பச்சைமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
சோடா மாவு - ஒரு பின்ச்
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காய தூள் - ஒரு பின்ச்


 

முதலில் வெங்காயத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை சேர்க்கவும்.
கடலை மாவில் அரிசி மாவு, உப்பு, சோடா மாவு, மிளகாய் தூள் சேர்த்து வெங்காய கலவையுடன் சேர்த்து பிசறவும். கறிவேப்பிலையை நல்ல பொடியாக நறுக்கி போடவும். பக்கோடாவிற்கு கறிவேப்பிலை தான் மெயின்.
தண்ணீரை லேசாக தெளித்து கலவை பிசறினாற் போல் இருக்கனும். எண்ணெயை காய வைத்து வெங்காய கலவையை கிள்ளி போட்டு சிவந்ததும் எடுத்து எண்ணெயை நல்ல வடிய விடவும். இருமுறை நியூஸ் பேப்பரில் மாற்றி டிஷு பேப்பரில் வைக்கவும்.
சுவையான பக்கோடா ரெடி.
விருந்தாளிகளுக்கு சுலபமாக தயாரித்து கொடுக்கலாம்.
இத்துடன் தேவைப்பட்டால் புதினா, கொத்தமல்லி, கேரட், கேபேஜ் சேர்த்துக் கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்