நோன்பு கஞ்சி(ரமலான்)

தேதி: December 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பாசுமதி அரிசி நொய் - ஒரு கப்
பச்ச பருப்பு - கால் கப் (லேசாக வறுத்தது)
கீமா - நூறு கிராம்
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
டால்டா - கால் தேக்கரன்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - கொஞ்சம்
புதினா - ஐந்து இலைகள்
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
பொடியாக நறுக்கின கேரட் - ஒன்று
தேங்காய் பால் - கால் கப்


 

நொய்யையும், வறுத்த பச்ச பருப்பையும் அரை மணிநேரம் முன்பு ஊற வைக்கவும்.
குக்கரை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வதங்கியது இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கி கொத்தமல்லி புதினா சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கீமா, கேரட், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நல்ல வதக்கி இரண்டு நிமிடம் சிம்மில் வேக விடவும்.
வெந்ததும் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மூடி போட்டு தீயை குறைத்து வைத்து மூன்றாவது விசில் வரும் போது அடுப்பை அனைக்கவும்.
பிறகு ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.


நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யக்கூடிய பல வகை கஞ்சிகளில் இதுவும் ஒரு வகையாகும்.
நோன்பு காலங்களிலும் செய்யலாம், மற்ற நாட்களிலும் செய்யலாம். வயிற்றுக்கு இதமாக இருக்கும். இந்த கஞ்சிக்கு பக்கோடா சூப்பராக இருக்கும். மசால் வடை, பஜ்ஜி, சிக்கன் பஜ்ஜி போன்றவையும் நல்லா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ரமலான் Timeல நோன்பு கஞ்சி செய்முறை ரொம்ப உதவி ஆக இருக்கும் thank u very much but ஒரு doubt தேங்காய் பால் இல்லாமல் செய்யாலமா!,normal riceல செய்யாலமா,பதில் சொன்னால் நல்ல இருக்கும்
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் சாயிரா இதில் தேங்காய் பால் போடாமலும் செய்யலாம்.

இது கீமா அரைகிலோ தளித்து வைத்து கொண்டால் தினமும் அப்ப அப்ப பிரெஷ்ஷாக கஞ்சி போட்டு குக்கரில் 5 நிமிடத்தில் போட்டு கொள்ளலாம்.
ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்

நான் சில கேள்வி கேட்டு இருந்தேன் அதற்கு பதில் கூறவில்லை நீங்கள்,reply me pls.
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஜலீலாக்கா ஊர் போய் இருந்தாங்க ரிஜ்வானா அதனால்தான் பதில் போடல போல அவங்க குறிப்பை இன்னும் சரியா படிக்கல எனினும் நானும் கஞ்சி ச்ய்யும் பழக்கம் இருக்கு சோ பதில் தாரேன் தேங்காய் பால் இல்லாமல் செய்யலாம் ஆனால் டேஸ்ட் குறையும்..கஞ்சிக்கு மெயின் தேங்காய் பால்தான் டேஸ்ட்.. அதோட தாராணமாக சாதத்துக்கு உபயோகிக்கும் அரிசியை யூஸ் பண்ணலாம் ..காலையில் சாதம்,கறி மீர்ந்தூட்டுனா இப்படி கஞ்சி போட்டுடுவேன்..ஆனா கொஞ்சம் பிலண்டரால் லைட்டா அடிச்சுக்கனும் லாஸ்டில்

இதை அவங்க போட்டு இருக்காங்கலான்னு தெரியல படிக்க இப்ப டைம் இல்லை இது போதும்னு நினைக்கிறேன் இல்லைனா அக்கா வருவாங்க பதில் தர ஆப்பம் சுடனும் பை ரிஜ்வானா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரிஜ்வானாக்கு பதில் போட்டதும் என்க்கும் கஞ்சி குடிக்கனும் போல ஆசையா இருக்கு

இப்பவே பிலைட்டில் பறந்து வந்து தந்துட்டு போங்க புள்ளைதாச்சி நான் இல்லைனா பாவம் :-(

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

டியர் சாயிரா

எல்லா அரிசியிலும் செய்யலாம், ஆனால் அரிசியை மிக்சியில் நல்ல பொடித்து கொள்ளனும். பாசுமதி அரிசியில் செய்தால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.

தேங்காய் பால் நாங்க அவ்வளவ ஊற்றுவது கிடையாது, கொஞ்சமா ஒரு தேக்கரண்டி தேங்காய் பவுடர் கரைத்து ஊற்றுவோம்.
அது வெறும் வொயிட் கஞ்சிக்கு தேங்காய் பால் கொஞ்சம் அதிகமா ஊற்றனும்.
ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸாலமு அலைக்கும்
நான் போன வருடம் ramadan கஞ்சி செய்யும்போது coconut துருவி போடுவேன் இப்போ diet அதனால் தான் கேட்டேன்.அக்கா,எப்படி இருந்துச்சு vacation.அப்புறம் என் name ரிஸ்வானா.
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

தேங்க்ஸ்பா உங்க பதிலுக்கு
இப்பொ எத்தனை மாசம்
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எனக்கு 3 வது மாசம்..துஆ செய்யுங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

insha allah கண்டிப்பாக
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

நான் இந்த வருடம் நோன்பு கஞ்ஞியில் சோயா பருப்பு,பச்ச பாசிபருப்பு,brown colour பருப்பு(பெயர் தெரியவில்லை),வெறும் வாணலியில் வறுத்து,மிக்சியில் ஒன்று இரண்டாக அரைத்து ஒரு spoon எடுத்து அரிசி ஊற வைக்கும் போது ஊற வைத்து சேர்த்தால் சுவை இன்னும் சூப்பரா இருக்கும்.... உடம்புக்கும் மிக நல்லது
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

நோன்பு கஞ்சியில் நானும் பாசி பருப்பு, கடலை பருப்பு, பிரவுன் அரிசி பர்கல் அது கூட சேர்த்து கொள்வேன்,
நான்கு வெந்தயம் போட்டால் வயிற்றுக்கு நல்லது.
ஜலீலா

Jaleelakamal

நோன்பு கஞ்சி
இந்தாங்க அதிரா இத டிரை பண்ணி பாருங்கள்.
இது சிக்கனிலும் செய்யலாம்.
ஜலீலா

Jaleelakamal

நோன்பு கஞ்சி செய்யும் போது,நூறு கிராம் அரிசிக்கு,கால் டீஸ்பூன் வெந்தயம்,அரைஸ்பூன் சீரகம்,அரைஸ்பூன் சோம்பு அரைத்து சேர்த்து செய்து பார்க்கவும்.மொத்தமாகவும் பொடித்து வைத்து யூஸ் பண்ணலாம்.மற்றபடி நீங்கள் செய்வது போல் தான் நானும் செய்வேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியா நான் மொத்தமா பொடித்து வைத்துகொள்வேன் வெந்தயம் சேர்ப்பேன், வெள்ளை கஞ்சிக்கு சீரகம் சேர்ப்பேன், ஆனால் சோம்பு வாசனை ஆருக்கும் பிடிக்காது. சில அயிட்டத்துக்கு மட்டும் தான் (வடகறி, மிளகு சிக்கன், மசால் வடை, சென்னா போன்றவைக்கு, )

வேண்டுமானால் நீங்க சொன்ன தால் ஒரு முறை எப்படி இருக்கு என்று செய்து பார்க்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal

what is keema?

முழு கறி எலும்புடன் போட முடியாது, போடலாம், கறியை துண்டு துண்டாகவும் நருக்கி போடலாம் ஆனால் நிறைய தேவைபடும், கஞ்சிக்கு கீமா தான் போடனும், அதாவது மட்டன் நல்ல கொத்துவார்கள், (கொத்துக்கறி),அதே போல் சிக்கனையும் கொத்தி போடலாம்.

கீமா ‍- கொத்துக்கறி

Jaleelakamal