சிக்கன் சூப் - 2

தேதி: December 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் வேகவைக்க :
சிக்கன் - ஒன்று
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கார்ன் வேகவைக்க :
சோளம் - கால் கிலோ
சர்க்கரை
உப்பு
க்ரீம் தயாரிக்க :
பட்டர் - நூறு கிராம்
மைதா - ஐம்பது கிராம்
வெங்காயம் - அரை பாகம் (பொடியாக நறுக்கியது)
பால் - இரண்டு கப்
கடைசியில் கரைத்து ஊற்ற :
கார்ன் ஃப்ளார் மாவு - ஐம்பது கிராம்
முட்டை - இரண்டு
வெள்ளை (அ) கருப்பு மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு டிராப்


 

சிக்கனில் கொஞ்சம் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) (இஞ்சி பூண்டு பொடியாக அரிந்தது வெங்காயம் பொடியாக அரிந்தது போட்டு வேகவைத்து வடிகட்டி தண்ணீர் தனியாக, எலும்பிலிருந்து சிக்கன் துண்டுகள் தனியாக எடுத்து வைக்கவும்.
கார்னில் கொஞ்சம் உப்பு, தண்ணீர் பால் ஒரு கப் சேர்த்து வேகவைத்து ஆறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய சட்டியில் பட்டரை போட்டு அதில் மைதாவை லேசாக தூவி தூவி கிளறி அரை வெங்காயத்தையும் போட்டு ஒரு கப் பாலில் சேர்க்கவும்.
பிறகு வடிகட்டிய சிக்கன் தண்ணீரை சேர்க்கவும்.
பிறகு தனியாக வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
பிறகு ஒன்றும் பாதியுமாக அரைத்த கார்னை சேர்க்கவும்.
நல்ல கொதிக்கட்டும் கார்ன் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
நல்ல கொதிக்கும் போது இரண்டு முட்டையை நுரை பொங்க அடித்து ஒரு கையால் ஊற்றிக்கொண்டே மறுகையால் கிளறவும் விட்டால் கொதகொத என்று ஆகிவிடும்.
பிறகு மிளகு துள், சோயாசாஸ் ஒரு டிராப் ஊற்றி இறக்கவும்.


ஹோட்டலில் போய் தான் சிக்கன் சூப் சாப்பிடனுமா என்ன நாமும் செய்யலாமே ஹோட்டலை விட சூப்பரா. குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது. குளிர் காலத்தில் செய்து குடிக்கலாம். நோன்பு காலங்களில் செய்யலாம்.
பட்டரில் மைதாவை போட்டு கிளறும் போது தீயை சிம்மில் வைத்து கட்டி பிடிக்காமல் கிளறவும், இல்லை தெரியவில்லை என்றால் மைதாவில் தண்ணீரை கட்டியாக கரைத்து பட்டரில் ஊற்றி விடவும். இதற்கு தொட்டு கொள்ள கட்லெட், சிக்கன் பஜ்ஜி நல்ல இருக்கும். சிக்கன் பக்கோடா, வடை, பஜ்ஜி, இதுவும் நல்ல இருக்கும். கேன்சர் நோயாளிகளுக்கு இந்த சிக்கன் சூப் சாப்பிட்டால் கூட நல்லது. கொஞ்சம் மெனக்கெடனும் ஆனால் நல்ல தெரிந்து கொண்டால் டெய்லி செய்கிற சாம்பார், ரசம் போல் ஈஸியாக செய்யவரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

1 சிக்கன்னா 1 கிலோ அளவா ?அத்தனை செஞ்சா இங்க வேஸ்ட் ..ரீமாக்கு கொடுக்க 2 பீஸ் போதுமா ஜலீலாக்கா

தளிக்க வெயிட் பண்ணுங்க கொஞ்சம் பிஸி
ஜலீலா

Jaleelakamal

தளிக்கா
கொஞ்சமா செய்யுங்க

இரண்டு துண்டு - சிக்கனில் செய்யுங்கஎல்லாம் சேர்த்து ஐந்து டம்ளர் வர மாதிரி
கிரீம் ஆஃப் கார்ன் கிராசரியில் டின் விற்கும் அதிலிருந்து ஒரண்டு மேசை கரண்டி போட்டுக்கொள்ளுங்க.
கார்ன் பிளார் ஒரு தேக்கரண்டி கரைத்து ஊற்றினால் போதும்.செய்தால் இரண்டு முன்று நாள் வரை பிரிட்ஜில் வைத்து குடிக்க்லாம்.
ஜலீலா

Jaleelakamal