இட்லி சம்பார்

தேதி: December 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

துவரம் பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கருவேப்பிலை - 5 இலை
கடுகு – தாளிக்க


 

முதலில் துவரம் பருப்பை தண்ணீர் விட்டு கழுவி கொள்ளவும்
பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வெட்டி கொள்ளவும் .
அதன் பின்னர் துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ப்ரஸர் குக்கரில் வேக விடவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் கறுவேப்பில்லை போட்டு வதக்கவும்.
இத்துடன் ப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை கொட்டி கிளறவும்.
இப்பொழுது சுவையான சாம்பார் ரெடி. இதனை இட்லியுடன் பரிமாறலாம்.
பருப்பு வேக வைக்கும்போது அத்துடன் ஒரு 50 கிராம் சுண்டைக்காயை இரண்டாக வெட்டி சேர்த்து வேக வைத்தால் சுவயான சுண்டைக்காய் சாம்பார் கிடைக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hai Geetha,

In your idly sambar receipe where we have to put salt.......

ungaludaya sambarla puli serkavendama?

Archana