பூண்டு சட்னி

தேதி: December 11, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூண்டு - 10 பல்
உளுந்தம்பருப்பு - 1 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
புளி - அரை நெல்லிக்காய் அளவு
தேங்காய் - 2 சில்லு
கடுகு - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்


 

முதலில் ஒருகடாயை எடுத்து அதில் 1 ச்Pஊன் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் உளுந்தம்பருப்பை போட்டு பொரிய விடவும்
உளுந்தம்பருப்பு சற்று சிவந்ததும் அதில் கடுகு, காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் புளி, பூண்டு சேர்த்து பூண்டு சற்று சிவக்கும் வரை வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
சற்று ஆறவிட்டு தேங்காய் சேர்த்து மை போல அரைத்து கொள்ளவும்
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை பொட்டு பொரித்து சட்னியில் கொட்டி பறிமாரவும்
தேவைப்பட்டால் தாளிக்கும் முன் ச்றிது தண்ணீர் விட்டு கரைத்தும் தாளிக்கலாம்
இது இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்


மேலும் சில குறிப்புகள்


Comments

I prepare garlic cuttney but garlic 15, chilli 3,coconut 1/2 cup,tomato 2, mixed i prepare barlic throat kara..kara.......

பூண்டு சட்னி உங்கள் முறைப்படி செய்தேன் தோசையுடன் சூப்பர் ஆக இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்