கடைந்த பாசிப்பயறு & ரசம்

தேதி: December 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பயறு - ஒரு கப்
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
ரசத்திற்கு தேவையானவை:
தனியாக எடுத்து வைத்திருக்கும் பயறு வேகவைத்த தண்ணீர் - ஒரு டம்ளர்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பல்
வரமிளகாய் - 2
கடுகு பெருங்காயம் - தாளிக்க
உப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழை - தேவையான அளவு


 

பாசிப்பயறை சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்கவும், வறுத்த பயறு, ஒரு வரமிளகாய், மிளகு, சீரகம், மல்லி, மிளகாய்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், பூண்டு, உப்பு இவை எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
6 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும். குக்கரில் சூடு ஆறியதும் குக்கரை திறந்து பருப்பு தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
வெந்த பயறை லேசாக கடைந்து விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் தாளித்து பயறில் போடவும்.
இந்த பாசிப்பயறு சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
ரசம் செய்யும் முறை:
கடுகு, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து ஊற்றி தக்காளியையும் கரைத்துவிட்டு ரசப்பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
ரசம் கொதித்ததும் பருப்பு தண்ணீரை ஊற்றி ஒருகொதி வந்ததும் மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கடைந்த பாசிபயறு செய்தேன், சுவை சூப்பர். இந்த மாதிரி செய்யவேண்டும் என்று எனக்கு கொஞ்சநாளா ஆசை. ப்ரெண்ட் ஒருத்தர் கோயிலில் ப்ரெட்டுக்கு கொடுத்தாங்க என்று சொன்னாங்க. அப்போ டேஸ்ட் பண்ணினேன். ரசம் வைக்கல நிறைய தண்ணீர் வைக்காம கொஞ்சமா வச்சுட்டேன். அடுத்தமுறை ரசமும் செய்து பார்க்கவேண்டும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இதில் நீங்கள் குறிப்பிட்ட மிளகு,சீரகம்,மல்லி முழுதாகத்தானே போட வேண்டும்,அல்லது தூளாகவா?செய்து பார்க்கலாம் என்று நினைகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தனிஷா..!! பாசிப்பயறு கடைசலும், ரசமும் நல்ல சத்தானது. கர்ப்பினி பெண்கள் பாசிப்பயறு சேர்த்து கொள்வது ரொம்ப நல்லது. பொதுவாக சுண்டல் செய்து சாப்பிடுவதைவிட இந்த மாதிரி பாசிப்பயறை கடைந்து சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பாசிப்பயறு வேக வைத்த தண்ணீர் கம்மியாக இருந்தால் வெந்த பருப்பை சிறிதளவு எடுத்து நன்றாக கடைந்து விட்டு தண்ணீர் மிக்ஸ் பண்ணி ரசம் வைக்கலாம். நன்றிகள் தனிஷா..!!

ஆசியா..!! பருப்பிற்கு மிளகு, சீரகம், மல்லி முழுசாகத்தான் போடவேண்டும். நான் கொஞ்சம் முன்னதாகவே பதில் தந்து இருந்தால் உங்களுக்கு வசதியாக இருந்திருக்கும். இடையில் கரண்ட் கட் - ஆகி விட்டது ஆசியா.....அதனால் லேட் - ஆகிவிட்டது. நாளைக்கு செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

மாலதி செய்து பார்க்கிறேன்.டைம் 11.22.a.m.தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இப்பதான் உங்க ப்ரபைல் பார்த்தேன்,நிறைய அனுபவம் உள்ளவங்க ,நான் நீங்க சின்னவங்க என்று நினைத்து விட்டேன்.பருப்பு,ரசம் டேஸ்ட் நல்ல வித்தியாசமாக இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா..!! என்னுடைய ப்ரொஃபய்ல் இப்பத்தான் பார்த்தீங்களா?.........நான் வயதில், அனுபவத்தில் மூத்தவராக இருந்தாலும் சமையல் குறிப்புகள் என்னைவிட நீங்கள் அதிகமாக விதவிதமாக கொடுத்து இருக்கீங்களே.....

நானும் இதுபோல்தான் செய்வேன்.ஆனால் இதுவரை ரசம் வைத்தது இல்லை.இன்று ரசமும் செய்தேன். சூப்பரா இருக்கு.நன்றி
செல்வி

சவுதி செல்வி

கடைசல், ரசம் ரெண்டுமே அருமையா இருந்தது. நன்றிங்க. நீங்க சொன்ன மாதிரியே தான் நாங்களும் சாப்பிடுவோம் - சுடு சாதத்தோட, நெய் விட்டு !!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சூப்பர் மேடம் பாசிப்பயிறு கடைசல்,ரசம் 2மே ரொம்ப நல்லாயிருண்டதது

செல்வி, சந்தனா, மேனகா மூவருக்கும் என்னுடைய நன்றிகள்..!!

மாலதி மேடம்,
கடைந்த பாசிப்பயிறு/ரசம் செய்தேன். விரத நாள்களில் எல்லாம் என் மாமியார் எப்பவும் இந்த பருப்புதான் கடைவார்கள். உங்க குறிப்பு பார்த்ததும் இதை செய்து பார்த்தேன். ரொம்ப மணமாக, சுவையாக நன்றாக இருந்தது மேடம். டின்னருக்கு சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ரொம்ப நன்றாக இருந்தது!. சுவையான டூ இன் ஒன் ரெஸிப்பி! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மாலதி அக்கா, பாசி பயறு கடைசல் மிகவும் நன்றாக இருந்தது. லஞ்சுக்கு சாதத்துடனும், பிறகு நைட் சப்பாத்தியுடனும் சாப்பிட்டோம். அருமை. நன்றி உங்களுக்கு.