காலிஃப்ளவர் வறுவல்

தேதி: December 11, 2007

பரிமாறும் அளவு: 4 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

காலிஃப்ளவர் - கால் கிலோ
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
கடலை மாவு - கால் கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி


 

காலிஃப்ளவரை பூ பூவாக பிரித்து கொதிக்கும் வெந்நீரில் உப்பு போட்டு அதில் இரண்டு நிமிடம் காலிஃப்ளவரை போட்டு எடுத்து விடுங்கள்.
பிறகு அதில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு எண்ணெயை காய வைத்து நல்ல டீப் ப்ரை செய்து டொமேட்டோ சாஸுடன் சாப்பிடவும்.


ஆறிவிட்டால் மொறு மொறுப்பு போய்விடும். கொஞ்சம் கார்ன்ப்ளார் மாவு கூட சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்