BBQ சிக்கன் (அ) க்ரில் சிக்கன்

தேதி: December 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
உப்பு - தேவைக்கு
காஷ்மீர் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி (அ) சாதா மிளகாய் தூள்+ரெட் கலர்
ஷான் தந்தூரி மசாலா (அ) சக்தி மசாலா - இரண்டு தேக்கரண்டி
தயிர் - அரை கப்
எலுமிச்சை சாறு - இரண்டு
பூண்டு - ஐந்து பல்
பச்சை மிளகாய் - ஆறு
ஆலிவ் ஆயில் - நான்கு மேசைக்கரண்டி


 

சிக்கனை பெரிய ஹோல் லெக் பீஸாக வாங்கி வந்து அதை கொழுப்பெடுத்து விட்டு வினிகர் ஊற்றி ஊற வைத்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
பூண்டு, பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து அத்துடன் தயிர், ஷான் மசாலா, மிளகாய் தூள், உப்பு, லெமென் ஜுஸ் கலந்து சிக்கனில் தடவவும்.
தடவி ஒரு மணி நேரம் ஊறியதும் ஆலிவ் ஆயிலை ஊற்றி மறுபடியும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் கேஸ் ஓவன் (அ) க்ரில் (அ) BBQ பண்ணவும்.
ப்ரீ ஹீட் செய்து விட்டு 20 நிமிடம் வைக்கவும்.
BBQ அடுப்பில் கரிமூட்டி மேலே உள்ள கம்பியில் வைத்து சுட்டு சாப்பிடவும்.


குபூஸ், கார்லிக் சாஸ், வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், தக்காளி சாலட், வட்ட வட்டமாக அரிந்து வைத்து பெப்பர் தூள், உப்பு தூள் தூவி லெமென் பிழிந்து சாப்பிடவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

என் பையன் பள்ளி பாட் லக் பார்ட்டிக்கு செய்தேன். ரொம்ப நல்ல இருந்தது. எல்லா நாட்டினரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு.

BBQ சிக்க கிரில்
வித்யா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்குரொம்ப நன்றி.
இது எண்ணையில்லாதது இங்குள்ள அரபிகள் 75% இதை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.
எந்த பார்க் போனாலும் இதை சுட்டு கொண்டு இருப்பார்கள்.
குபுஸுடன் சாப்பிடுவார்கள்.
.
பெரிய முத்தம் (தாவாரம்) இருப்பவர்கள் இதை வீட்டிலேயும் செய்யலாம்
நாங்களும் செய்வோம்.இது குழந்தைகள்,பெரியவர்கள அனைவருக்கும் பிடித்த டிஷ்.

ஜலீலா

Jaleelakamal

உங்க BBQ சிக்கன் தான் ஞாயிற்று கிழமை செய்தேன்... ஒன்னு ஒன்னா தினமும் சாப்பிட்டோம் .. ரொம்ப அருமை.
என்னிடம் வினிகர் இல்லை மற்றும் ஷான்னுக்கு பதில் பாட்ஷா( எனக்கு பாட்ஷா தான் பிடிக்கும் .... நான் ரஜினிகாந்தை சொன்னேன்) மசாலா போட்டேன்... சூப்பரோ சூப்பர்....
லேட்டா பின்னூட்டம் அனுப்புவதற்கு மன்னிகவும்....
I hope everything is okay...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா BBQ செய்தீங்களா //
இந்த BBQ நாங்க குளிர் கலத்தில் தான் பார்க் போய் செய்வோம்.

ஆ வாய் ஊருது எங்க இப்போது இங்கு வெயில் ஆரம்பித்து விட்டது. இனி இரண்டு மாதத்திற்கு பிரியாணி தம் போல் இருக்கும் வெளியில் அனல் பொருக்க முடியாது. வெளியில் போனா சும்மா தொப்ப தொப்பயா நனைந்து வரனும்.
நம்ம பராவாயில்லை, பாவம் அந்த லேபர்ஸ். கன்ஸ்ட்ரக்ஷன் வெலை செய்பவர்கல்.

ரொம்ப கழ்டமா இருக்கு அவர்கலை பார்க்க, காலையிலேயே மொத்தமா கேப்பில் இருது ஒரு 50 , 100 பேர் சாப்பாடு கேப்பில் தாயாஅரித்தது எடுத்து வந்து வண்டியில் இரக்கி விடுவார்கள்.
அந்த சாப்பாடு அடிக்கிற வெயிலில் ஊசியே போய்விடும்.

ஜலீலா

Jaleelakamal

அது தான் வீட்ட்டுக்குளே செய்ய முடியும்.. இங்க மைக்ரோவேவ் அவனிலே கிரில் மோட் வருது. இன்னைக்கு எனக்கு ஒரே தலைவலி... ஒரு டீய குடிச்சுட்டு அமைதியா இருக்கலாம்ன்னு பாக்கிரேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா கிரில் செய்தீங்களா, என்ன தலைவலியா இருக்க வே இருக்கு என்னுடைய இஞ்சி டீ கூட கொஞ்சம் இஞ்சி போட்டு குடிங்க பஞ்சாய் பறந்து விடும்.
இன்னும் ஒன்று கட்டை விரல் அழுத்தி கொண்டே இருங்க சரியாகும், நகம் சைட் இல்லை மேல் பகுதி.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா,
நானும் இது அடிக்கடி செய்வேன், கிறில் பண்ணுவேன். கொழுப்பெல்லாம் போய் விடும், உடம்புக்கு கெடுதியில்லை. சுவையாகவும் இருக்கும், ஆனால் நான் வினிகர் சேர்ப்பதில்லை. ஏன் வினிகர் சேர்க்கிறீங்க, புளிப்புக்காகவா?

இலா என்ன தலை இடியா? கேட்டதும் எனக்கும் இடிக்கப்போகுது மாதிரி தெரியுது. இது எனக்கு அடிக்கடி வருவதுதான். கிச்சினில் குக்கர் பான் ரேடியேற்றர் பழுதாகிவிட்டது. இப்பதான் ஒராள் வந்து மாத்துகிறார். அதனால் ரீ போடவும் வழியில்லை. வேலை செய்பவரைக் கேட்டேன் ரீ/கோப்பி ஊத்தவோ என்று... கஸ்டகாலம் வேண்டாம் என்றார். இல்லையென்றால் அந்தச் சாட்டில் நானும் குடித்திருப்பேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இரட்டையர் நலமா?அம்மா வந்த பிஸியில் வரமாட்டீங்களோன்னு நினைத்தேன்,
வினிகர் சேர்த்து கழுவுவதால் அதில் உள்ள வாடை போய் விடும்.
அதுவும் இல்லாமல் ஸ்வீட் அன்ட் சோர் சூப் களுக்கு வினிகரும் சேர்ப்பார்கள், சைனீஸில், சிக்கன் பிரைக்கும் சேர்க்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

இப்ப குழந்தைக்கு பரவாயில்லி. எனக்கு ஒரே சிரிப்பு நம்ம அதிரா தலை இடி என்று போட்டுந்தாங்களா. எனக்கு தெரிந்தது இடி வரும் மழை பெய்யும். என்னடா தலையில் இடியா ஒரு வினாடி சிரிப்பு தாங்க முடியலை அதிரா.

என்ன இலா நல்ல ஸ்ட்ராங்க ஒரு டி சாப்பிடு ரெஸ்ட் எடுங்க. அப்புறம் உங்களுக்கு லாங் வீகெண்ட் என்ன ப்ளான்?

உங்கள் அன்பு வார்தைகள் அருமருந்து...
ஜலீலக்கா.. ஒத்த தலைவலி ஏன் நாம தனியா இருக்கும் போது மட்டும் வருது தெரியுமா? அப்பதான் என்ன மாதிரி ஆளுங்க எல்லாம் கொஞசம் அடுத்தவங்களுக்கு தலவலி குடுக்க மாட்ட்டோம்
ஓரளவுக்கு பங்ஷனல் ஆன பின் இஞ்சி டீயும் மேகியும் இப்பொ தான் சாபிட்டேன்...

அதிரா.. உங்க அன்பில் நான்.. என்ன சொல்ல்ரது... பிரெண்டுக்கு தல வலின்னா அந்த வலி உங்களுக்கே வந்த மாதிரி துடிக்குதே... மனசெல்லாம் அப்படியே நெகிழ்ந்துவிட்டது...

விஜி... இப்போ ஒகே...
தூத்துக்குடி/நெல்லை பகுதியில் தலைவலியை = மண்டையிடி என்பார்கள்... டீ குடிச்சு அப்புரம் ஒரு அம்ருதாஞன் தடவி.. இந்த லாங் வீகென்ட்..இப்போதிக்கு ஒரு ப்ளானும் இல்லை... இன்னைக்கு தலைவலிகே இன்னும் 2 நாள் நான் டவுன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

விஜி, நாங்க தலையிடி, கண்குத்து, வயிற்று வலி/குத்து/நோ,
பல்லுக்குத்து, தலைமயிர் (முடி என்று பாவிப்பதில்லை)... இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம்.... மெதுவாக உங்களையெல்லாம் இலங்கைப் பாஷைக்கு மாற்றிவிடுவேன்... அல்லது நான் கெதியில் இந்தியப் பாஷைக்கு மாறிவிடுவேன்.

ஜலீலாக்கா அப்பா, அம்மா நாளை தான் வருகிறார்கள்.

இலா, எனக்கு யாராவது ஏதும் சொன்னால் எனக்கும் அப்படித் தோன்றும்,, இப்ப நீங்க ரீ குடிக்கிறேன் என்றால் உடனே எனக்கும் விடாய்க்கும்.... போனில் கதைக்கும்போது அம்மா சொல்வார் வடை சுடுகிறேன் என்று... நான் இங்கு உடனேயே உழுந்து ஊறப்போட்டு விடுவேன்.... இப்படி நிறைய....

ஆனால் இந்தத் தலையிடி யாராவது சொன்னால், எனக்கும் வரபோகுதோ வரப்போகுதோ என்ற பயத்திலேயே வந்துவிடும். கை மருந்தெல்லாம் போடுவேன் சரிவராவிட்டால் பனடோல்தான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் இன்றைக்கும் ஒரு மெயில் அனுப்பினே. திரும்பி வந்தது. கொஞ்சம் சொல்லுங்க.

விஜி, இப்ப ஓகேயா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

டபுள் ஒ.கே..

ஒவன்னை எவ்ளவு நேரம் preheatடில் வைப்பது. is that ok if the pieces are in medium size.

டியர் பரிதா

இருபது நிமிடம் பிரி ஹீட் செய்யுங்கள், மீடியம் சைஸும் ஒகே தான். இடையில் திறந்து பார்க்கும் வசதி இருந்தால் பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

டியர் பரிதா

இருபது நிமிடம் பிரி ஹீட் செய்யுங்கள், மீடியம் சைஸும் ஒகே தான். இடையில் திறந்து பார்க்கும் வசதி இருந்தால் பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

டியர் பரிதா

இருபது நிமிடம் பிரி ஹீட் செய்யுங்கள், மீடியம் சைஸும் ஒகே தான். இடையில் திறந்து பார்க்கும் வசதி இருந்தால் பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

asslam alliku
ஹாய் நான் உங்க பதிலுக்க காத்த்கொண்டு இருக்கிறென்

நானும் தான் காத்து இருக்கிறேன் didi, நீங்கள் கேட்ட பதிலுக்கு jaleela அக்காவிடமிருன்டு
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

அன்புள்ள பரிதா ரொம்ப சாரிப்பா நீங்க கேட்ட தினத்தில் இருந்து பதில் போட்டு கொண்டு இருக்கேன் போக மாட்டுங்கிறது.
இப்ப கூட எரர் தான் வந்தது.

140 டிகிரி வையுங்கல். சிக்கன் என்பதால் சீக்கிறம் வெந்து விடும் திறந்து பார்க்கும் வசதி இருந்தால் இடையே பார்த்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

இந்த குறிப்பை செய்து பார்தேன் ,boneless chicken கொஞ்சம் இருந்தது அதில் இதே சாமான்களை போட்து செய்தேன்(அளவு chickenக்கு ஏற்றார் போல்),microwave ovenல் வைத்து செய்ததில் kurma போல ஆகி விட்டது,பிறகு அதை எடுத்து deep fry செய்து என்னவருக்கு கொடுத்தேன்.சுவை நன்றாக இருந்தது.note:நீங்கள் கூறிய TEMPRATUREல் தான் செய்தேன்,MICROWAVE OVENல் CRISPYஆக வருவதற்கு என்ன செய்வது நான் MICROWAVE OVENக்கு புதுசு.
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

குக்கிங்க் ரேஞ்ச் அல்லது BBQ வில் நல்ல வரும், ஆனால் மைக்க்ரோவேவில் நான் அவ்வளவா செய்தது இல்லை, காய் மட்டும் வேக வைப்பேன், இரண்டு தடவை ஸ்பாஞ்ச் கேக் செய்தேன், நல்ல வந்தது ஆனால் பிரவுன் கலர் வரல.
கன்வென்ஷன் மைக்ரோவேவில் வரும்.

சிக்கன் , பிஸ்கேட்,கேக், பிட்ஜா விற்கு என்று ஓவன் தனியாக இருக்கும் அதிலும் நல்ல வரும்.
ஜலீலா

Jaleelakamal

assalamu allikum

உடனடியாக பதில் கோடுததிற்க்கு நன்றி. இந்த வாரம் செத்து பார்து சொல்கிறென்.

////உடனடியாக பதில் கோடுததிற்க்கு நன்றி. இந்த வாரம் செத்து பார்து சொல்கிறென்.///

ஆ பரிதா என்னப்ப தமிழை இப்படி கொலை பண்ணி விட்டீர்கள்.
எல்லோருக்கும் எழுத்துபிழை வரதான் செய்யும். போக போக சரியாகிவிடும்.

ஜலீலா

Jaleelakamal

assalam allikum my son was with me and he was trying..... he was eager to type in tamil and as well as want to play vedio games....from next week he will be going to school and i will be handling the system.........i know he did the mistakes but without studying tamil in school....he did well....... i think so.....riz arasiyal vaazhilkail ethu yellam sakajam.......hahahahaha

assalau allikum
கூட்டாஞ்சோறு பகுதில் உங்கள் recipes பார்தேன். உங்கள் குடும்பம் மிகவும் lucky தான். தினம் ஒரு புது டிஷ். கிட்சன் கில்லாடி tittle உங்களுக்கு தான் தர வேண்டும்.

ஹாய் jaleela mam
BBQ chicken செய்து பார்த்தேன், மிகவும் நன்றாக வந்தது........ருசியோ, ருசி, இப்படி ஒரு நல்ல recepie கொடுத்த் jaleela mamக்கு மிகவும் நன்றி்.

டியர் பரிதா BBQ கிரில் சிக்கன் உஙக்ள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டது நல்ல சிக்கன் ஊறியதும் மசாலா தண்ணீர் நிறைய நிற்கும் அதோடு போடக்கூடாது வெரும் சிக்கன் மட்டும் எடுத்து வைக்கனும்.

ஜலீலா

Jaleelakamal

fareeda didiக்கு ,காமெடி கிமடி பண்ணலய
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

fareeda didi
see our jigarthanda receipe in drinks or islamic food section.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ரிஜ்வானா உங்க ஜிகர் தண்டா பார்த்தேன் கண்டிப்பா செய்து பர்க்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

assalamu allikum
சாரி கேள்வி தப்பாக கேட்டுவிட்டேன் எவ்ளவு degreeயில் preheat செய்ய வேண்டும்.