மட்டன் கீமா (அ) பீஃப் கபாப்

தேதி: December 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் கீமா (அ) பீஃப் - முன்னூறு கிராம்
பச்சை மிளகாய் - நான்கு (நல்ல பழுத்த ரெட் கலர்)
இஞ்சி பூண்டு - ஒரு மேசைக்கரண்டி
தக்காள் - ஒன்று
வெங்காயம் - அரை பாகம்
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
புதினா - கால் கட்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


 

கீமாவை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.
கீமாவுடன் மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட், உப்பு போட்டு அரைத்ததையும் கலக்கி பிசைந்து தண்ணீர் இல்லாமல் இருக்கனும் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் ஊறவைத்து சுடவும்.
கபாப்க்கு என நீளமான கம்பி இருக்கும். அதில் சொருகி க்ரிப்பாக கம்பியில் பிடித்து விட்டு BBQ வில் கரிமூட்டி சுட்டு சாப்பிடவும். வீட்டிலும் மேல் மாடியில் கூட செய்யலாம் பார்த்து தீ பரவாமல் பார்த்து செய்யுங்கள்.


இந்த அரபு நாட்டில் அரேபியர்கள் குளிர் காலங்களில் பிக்னிக் மாதிரி பார்க்குகளில் இதை செய்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்