லெமன் ரைஸ்

தேதி: December 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (7 votes)

 

பச்சரிசி - 2 ஆழாக்கு
எலுமிச்சை - ஒன்று
நல்லெண்ணெய் - 100 மில்லி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
வேர்க்கடலை - 25 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - அரை இன்ச் அளவு
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி


 

பச்சரிசியை 4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து சாதத்தை உதிரியாக ஆறவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கடலைபருப்பு, வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, சாதத்தை கொட்டி கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்