கீரை உருளை மசாலா குருமா

தேதி: December 13, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு -- 2 என்னம் (வேகவைத்து சதுரமாக நறுக்கியது)
பாலக் கீரை -- 1 கட்டு(சுத்தம் செய்து பொடிதாக நறுக்கியது)
அரைக்கீரை -- 1 கட்டு(சுத்தம் செய்து பொடிதாக நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம்
பச்சை மிளகாய் -- 4 என்னம்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
பூண்டு -- 4 பல்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- தேவைக்கேறப்


 

கீரையுடன் பச்சைமிளகாய்,தக்காளியுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
ஆறியதும் உப்பு சேர்த்து கடைந்து வைக்கவேண்டும்.
பின் உருளைக்கிழங்கை எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
கீரைக் கலவையில் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் 2 டேபிள் ஸ்பூன் எண்ணையில் சீரகம் , பூண்டை சேர்த்து வதக்கி கலவையில் சேர்த்து கிளறி விடவும்.

வித்யாசமான சுவையில் கீரை உருளை மசாலா குருமா ரெடி.


மேலும் சில குறிப்புகள்