நெய் பிஸ்கட்

தேதி: December 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

மைதா மாவு -- 3/4 கப்
பேக்கிங் பவுடர் -- 1/4 ஸ்பூன்
சர்க்கரை பவுடர் -- 1/2 கப்
உருக்கிய நெய் -- 1/2 கப்


 

மைதாமாவில் பேக்கிங் சோடாவை கலந்து சலிக்கவும்.
இதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவேண்டும்.
இதை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து கையால் அழுத்தி வட்ட வடிவமாக்கி வைக்கவும்.

இந்த பிஸ்கட்களை நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போது பிஸ்கட்களின் மேல் நெய் தடவினால் பளபளப்பாக இருக்கும்.
சுவையான நெய் பிஸ்கட் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி. சுபா மேடம்,
உங்க பிஸ்கட் செய்முறை குறிப்பு நன்றாக உள்ளது. ஆனால் ஒரு சந்தேகம். ஓவனில் எத்தனை டிகிரி வெப்பத்தில் எத்தனை நேரம் வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டால் வசதியாக இருக்கும்.
தயவு செய்து அதையும் குறிப்பிடுங்கள். செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு மீண்டும் எழுதுகிறேன்.
நன்றி
ஸ்ரீவித்யா