எறா ரோஸ்ட்

தேதி: December 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எறா -- 1/2 கிலோ
மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது -- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
தனியாதூள் -- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 1/2 டீஸ்பூன்
கார்ன் ப்ளார் -- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
வெங்காயம் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை -- 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு -- 1 டேபிள் ஸ்பூன்
எண்ணைய் -- பொரிப்பதற்கு


 

மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், கார்ன் ஃப்ளார், உப்பு இவற்றை சிறிதளவு தண்ணீரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
தில் சுத்தம் செய்த எறாக்களைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி எறாவை போட்டு பொறித்து எடுக்கவும்.
மற்ற வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி வெங்காயம்,தக்காளியை வதக்கி கொத்தமல்லி தழை , எலுமிச்சை சாறு, சிறிதள்ளவு உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கி பொரித்த எறாவை போட்டு மீண்டும் ஒரு வதக்கு வதக்கி பறிமாறலாம்.
சூப்பரான எறா ரோஸ்ட் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களேட ப்ரான் ரொஷ்ட் ரும்ப நல்லா இருந்தது.very tasty food.thanks.

thanks for the feedback