பாலக் கீரை சூப்

தேதி: December 13, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாலக் கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி,பூண்டு விழுது -- 1 1/2 டீஸ்பூன்
வெண்ணைய் -- 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
பால் -- 1 கப் (காய்ச்சி ஆறவைத்தது)


 

வாணலியில் வெண்ணைய் போட்டு உருகியதும் வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது, உருளையை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கீரையை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி நிறம் மாறும் முன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
ஆறியதும் அரைத்து வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் அரைத்து வடிகட்டியதை ஊற்றி அதனுடன் பால் சேர்த்து கலக்கி 4 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
அதனுடன் உப்பு,மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறலாம்.
ஈசியான எல்லோரும் விரும்பும் பாலக் கீரை சூப் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா இஞ்சி பூன்டை எங்க சேர்க்கனும்?மன்றத்தில் நுழையவே முடீல.

Jaleela Kamal

தளிகா
இஞ்சி பூண்டை வெங்காயம் வதக்கும் போது தான் சேர்க்கனும்.
ஜலீலா

Jaleelakamal