கேரட் பூரி

தேதி: December 14, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
கேரட் - துருவியது - 1/2 கப்
இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்த விழுது - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


 

கோதுமை மாவுடன் துருவிய கேரட், அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சீரகம் சேர்த்துப் பிசைந்து பூரிகளாக இட்டுப் பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி இன்று தான் முதல்முறையாக உங்களிடம் பேசுகிறேன். நலமாக இருக்கிறீர்களா? நேற்று முன் தினம், கேரட் பூரி செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. நான் எப்பொழுதும் கொஞ்சம் ரவை கலந்துதான் பூரி செய்வேன், இதிலும் 2டேபிள் ஸ்பூன் சேர்த்து செய்தேன். தாமதமான பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும்.

உத்தமி:-)

ஜே மாமி உங்களுடைய கேரட் பூரியும் என்னுடைய ஈசி சென்னா மசாலாவும்.
கேரட் பூரியில் சிறிது தில் கீரையும்(கொத்துமல்லி தழைக்கு பதில்),
, கரம்மசாலா பொடியும் சேர்த்து கொண்டேன் ரொம்ப ஜோர்.

ஜலீலா

Jaleelakamal

உத்தமி, ஜலீலா இருவருக்கும் நன்றி
அன்புடன்
ஜெயந்தி மாமி

திருமதி. ஜலிலா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த கேரட் பூரியின் படம்

<img src="files/pictures/aa65.jpg" alt="picture" />