தேங்காய் சட்னி

தேதி: December 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் -- 1 மூடி
பொட்டுக்கடலை -- 30 கிராம்
பச்சை மிளகாய் -- 3 என்னம்
தாளிக்க:
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 4 என்னம் (பொடிதாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
சிவப்பு வத்தல் -- 1 என்னம் (நசுக்கியது)


 

முதலில் மிக்ஸியில் தேங்காய்,பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுத்து சுத்தி பின் பொட்டுக்கடலை,உப்பு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.பின் கறிவேப்பிலை,சிவப்பு மிளகாய் போட்டு வதக்கி சட்னியில் ஊற்றவும்.
தேங்காய் சட்னி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

தேங்காய் சட்னி உங்கள் முறைப்படி இன்று செய்தேன் நன்றாக இருந்தது

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் சுபா இன்று உங்கள் தேங்காய் சட்னி செய்தேன். நானும் முன்பு இதே முறைப்பட்டி தான் செய்வேன். பொட்டுக்கடலை சேராமல். உங்கள் முறையும் நன்றாகத்தான் இருக்கின்றது. நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.