சூயம் -- 2

தேதி: December 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி மாவு -- 1 கப்
உப்பு -- ருசிக்கேற்ப
பூரணத்திற்கு:
கடலை பருப்பு -- 1/2 கப் (வேகவைத்து மசித்தது)
வெல்லம் -- 1/4 கப் (பொடியாக அரிந்தது)
தேங்காய் துருவல் -- 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் -- 4 என்னம் (நசுக்கியது)
எண்ணைய் -- பொரிக்க தே.அ


 

இட்லி மாவை அரைத்து 2 மணி நேரத்திற்குப் பின் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை போட்டு நன்கு இறுக்கமாக கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணையை காய வைக்கவும்.
பூரணத்தை உருண்டையாக பிடித்து அதை இட்லிமாவு கரைசலில் போட்டு முக்கி எடுத்து காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ருசியான சூயம் ரெடி.


மேலும் சில குறிப்புகள்