கத்தரிக்காய் மசாலா

தேதி: December 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 4
சிவப்பு மிளகாய் - 8
பூண்டு - 4 பல்
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலம்
தனியா - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கத்தரிக்காய் பொடியாக இருக்க வேண்டும். காயை முழுசாக கீறிக்கொள்ளவும்.
சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய், தனியா, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கி, கத்தரிக்காயையும் சேர்த்து வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறு தீயில் மூடி வேகவிடவும். காயில் மசாலா சேர்ந்து வதங்கியவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி மேடம்
இன்னைக்கு உங்கள் கத்தரிக்காய் மசாலா செய்தேன் நல்லா வந்தது சோம்பு,கசகசா, மசாலவெல்லாம் போட்டு வித்தியாசமா,நன்றி மேடம்.