கோழிக்குழம்பு

தேதி: December 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கோழி - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6
தேங்காய் - 2 சில்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு, இலை - ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி


 

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை மல்லித்தழை போட்டு வதக்கவும்.
மிளகு, சீரகம், சோம்பு மஞ்சள் தூளுடன் அரைத்து, இதனுடன் பூண்டு, சிறிது இஞ்சி, பாதி வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
வதங்கியவற்றுடன் கோழியையும் சேர்த்து கிளறி அரைத்த மசாலாவுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு வதக்கி 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தேங்காயுடன் ஒரு பல் பூண்டு சேர்த்து அரைக்கவும். குழம்பு கொதித்து கோழி வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

How are you? I would like to try this recipe.

I have doubts,please clarify me when you have time.

வெந்தயம் எத்தனை டீஸ்பூன் உபயோகிக்க வேண்டும்.

சின்ன வெங்காயமா உபயோகிக்க வேண்டும்.

தக்காளி கிராம் அளவில் கூறுங்களேன்.

இஞ்சி,பூடு பேஸ்ட்(ginger garlic paste) என்றால் எத்தனை டீஸ்பூன் சேர்த்து அரைக்கலாம்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மையாக தானே அரைக்க வேண்டும்.

தேங்காய் துருவல், ரெடிமேட் பாக்கெட் தான் வாங்குகிறோம்.துருவலாக என்றால் எத்தனை டீஸ்பூன் சேர்க்கலாம்.

இங்கு மலைப்பூடு தான் கிடைக்கிறது,பெரிய பல்லாக இருக்கும்,1 பல் சேர்த்து தேங்காயுடன் அரைக்கவா.

(பட்டை 1, கிராம்பு 1, இலை)-
என்று குறிப்பில் கூறியுள்ளீர்கள்.இதையெல்லாம் எப்போது சேர்க்க வேண்டும்.இலை என்றால் என்ன.

Sorry for troubling you.Thanks in advance.

தக்காளி =100கி
வெந்தயம் =1/2தேக்கரண்டி
பெரியவெங்காயம் போட்டு செய்யலாம். 100கி சேர்க்கவும்.
இஞ்சி, பூண்டு 2தேக்கரண்டி போடலாம்.
பிரிஞ்சி இலை தெரியாதா. பட்டை, கிராம்பு வாசனை சாமானுடன் சேர்ந்தது.
மலைப்பூண்டு கிடைத்தால் நல்லதுதானே. ஒரு பல் சேர்த்து மைய்ய அரைக்கவும்.
தேங்காய்த்துருவல் 3தேக்கரண்டி போட்டு அரைக்கலாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

உங்கள் பதிலுக்கு மனதார்ந்த நன்றி.மிகவும் நன்றி.

விரைவில் செய்ய விரும்புகிறேன்.

தொந்தரவுக்கு மன்னிக்கவும். சந்தேகங்கள் உள்ளன,க்ளீயர் பண்ணுங்கள் ப்ளீஸ்.

மிளகு சீரகம், சோம்பு ம.தூளுடன் அரைத்து, இதனுடன் பூண்டு, துளி இஞ்சி, பாதி வெங்காயம் சேர்த்து - மையாக அரைக்க வேண்டுமா அல்லது ரவை பதத்திற்கு அரைக்க வேண்டுமா.

பட்டை 1, கிராம்பு 1, பிரிஞ்சி இலை
என்று தேவையான பொருட்களில் கூறியுள்ளீர்கள்.இதையெல்லாம் எப்போது செய்முறையில் சேர்க்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

பிரிஞ்சி இலை 1 போதுமானதா.

நன்றி.

மைய்ய அரைக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஓரளவு அரைத்தாலே போதும்.
வெந்தயம் 1/2டீஸ்பூன் , சீரகம், சோம்பு 1/2டீஸ்பூன் போட்டு தாலிக்கும்போது பட்டை, பிரிஞ்சி1 போன்ற வாசனை பொருட்களை போட்டு தாளிக்கவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

பதிலுக்கு மிகவும் நன்றி.குறிப்பில் கடுகு,உளுந்து,வெந்தயம் தானே தாளிக்க சொல்லி இருக்கீங்க.சீரகம்,சோம்பு அரைக்க தானே சொல்லி இருக்கீங்க.

சீரகம்,சோம்பு அரைப்பதற்கா அல்லது தாளிப்பதற்கா.
தெளிவுபடுத்துங்கள்,ப்ளீஸ்.
நன்றி.