நண்டு மசாலா (கிரேவி)

தேதி: December 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

நண்டு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 6 பல்
இஞ்சி - அரை அங்குலம்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - நெல்லிகாய் அளவு
சோம்பு, சீரகம், மிளகு - தலா ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 4 சில்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க;
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
பிரிஞ்சி இலை - சிறிது
கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி


 

தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் 5 சின்னவெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு நண்டு சேர்த்து கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
அதில் உப்பு சேர்த்து அரைத்த மசாலாவையும் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து நண்டு வெந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நண்டு மசாலா கிரேவி செய்தேன் சுவையாக இருந்தது.
சரஸ்வதி அக்கா உங்கள் குறிப்பிற்கு நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"